கொட்டி தீர்க்கும் மழை : பல பகுதிகளில் வெள்ளம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
கொட்டி தீர்க்கும் மழை : பல பகுதிகளில் வெள்ளம்!

களுத்துறை மாவட்டத்தின் மதுராவல, பாலிந்தநுவர, மில்லனிய மற்றும் புலத்சிங்கள பிரதேசங்களில் பல வீதிகள் இன்னும் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குக்குலே கங்கை மற்றும் தெதுரு ஓயா நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் மேலும் திறக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்னும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனப் பணிப்பாளர் எஸ். ப. சி. சுகீஸ்வர தெரிவித்தார். 

இதேவேளை, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பிரதேசங்களில் இன்று (20) 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4