கனடா-மெனிடோபா பகுதியில் மதுபான விற்பனைக்கு வரையறை விதிக்க கோரிக்கை
கனடாவில் வின்னிபெக் வடக்கு மெனிடோபா பகுதியில் மதுபான விற்பனைக்கு வரையறை விதிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் வாழ்ந்து வரும் பழங்குடியின சமூகத்தினர் மத்தியில் வன்முறை குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. இந்த குற்ற செயல்களை தடுக்கும் நோக்கில் மதுபான விற்பனையை வரையறுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பழங்குடி இன தலைவர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர். கடந்த வாரம் பழங்குடியின சமூகம் வாழும் நகரமொன்றில் அதிக எண்ணிக்கையிலான கத்தி குத்துச் சம்பவங்கள் பதிவாகி இருந்தன.
இதனைத்தொடர்ந்து குறித்த பகுதியில் அவசர நிலைமை பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. மதுபான வகைகள் அதிக அளவில் கொள்வனவு செய்ய அனுமதிக்கப்படக்கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெருந்தொகையான மதுபானத்தை கொள்வனவு செய்வது தொடர்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என பழங்குடி இன தலைவர்கள் கோரியுள்ளனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் வன்முறை சம்பவங்களை எண்ணிக்கை 40 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீண்ட காலமாகவே பழங்குடியின சமூகங்கள் மீதான திட்டமிட்ட ஒடுக்குமுறைகளினால் இன்று இவ்வாறு சமூகப் பிரச்சினை உருவாகியுள்ளதாக குற்றம் சுமத்த்பபட்டுள்ளது.