கனடாவில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
கனடாவின் பல்வேறு இடங்களுக்கு குண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடாவில் காணப்படும் யூத அமைப்புகள் மற்றும் வைத்தியசாலைகள் என்பனவற்றுக்கு இவ்வாறு ஒரே விதமான குண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட யூத மத வழிபாட்டு தலங்கள், யூத நிறுவனங்களுக்கும் மருத்துவர்களுக்கும் இவ்வாறு குண்டு தாக்குதல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஒரே விதமான மின்னஞ்சல் மூலம் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அச்சுறுத்தல் விவகாரம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட தரப்பு எது என்பது குறித்த விசாரணைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த அக்டோபர் மாதம் 7ம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இவ்வாறான அச்சுறுத்தல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக யூத மத எதிர்ப்பு மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பு வெறுப்புணர்வு சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.