ஓய்வை அறிவித்த இந்திய அணி வீரர் ஷிகர் தவான்

#India #Cricket #Player #retirement
Prasu
1 year ago
ஓய்வை அறிவித்த இந்திய அணி வீரர் ஷிகர் தவான்

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

கடந்த 13 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வந்தார் தவான். ஷிகர் தவான் இந்தியாவிற்காக இதுவரை 34 டெஸ்ட் போட்டிகள், 167 ஒருநாள் போட்டிகள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 

2010ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். 38 வயதான தவான் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தற்போது அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். “இன்று நான் திரும்பிப் பார்க்கும்போது, ​​​​எனக்கு நல்ல நினைவுகள் மட்டுமே உள்ளன. எனக்கு ஒரே ஒரு கனவு இருந்தது, அது இந்தியாவுக்காக விளையாட வேண்டும், நான் அதை அடைந்தேன்” – தவான். “நான் நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடிய எனது அணிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். 

ஷிகர் தவான் கடைசியாக 2018ம் ஆண்டு இந்தியாவிற்காக டெஸ்டில் விளையாடினார். 2022ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் கடைசியாக இந்தியாவிற்காக விளையாடினார். 2021ம் ஆண்டு கடைசியாக சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடினார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4