சீனாவில் இருந்து வருகை தந்துள்ள இராணுவ கப்பல்கள்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
சீனாவில் இருந்து வருகை தந்துள்ள இராணுவ கப்பல்கள்!

சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் மூன்று போர்க்கப்பல்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

"HE FEI", "WUZHISHAN" மற்றும் "QILIANSHAN" ஆகிய மூன்று போர்க்கப்பல்களும் இன்று (26.08) காலை வந்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

அந்தவகையில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த Destroyer ரக போர்க்கப்பலான "HE FEI" 144.50 மீற்றர் நீளம் கொண்டதுடன் 267 பணியாளர்களைக் கொண்டது.

Landing Platform Dock வகையின் "WUZHISHAN" போர்க்கப்பல் 210 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் 872 பணியாளர்களைக் கொண்டுள்ளது.

Landing Platform Dock வகையின் "QILIANSHAN" போர்க்கப்பல் 210 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் 334 பணியாளர்களைக் கொண்டுள்ளது.

ஒரு பயிற்சிக்குப் பிறகு, கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு ஆகஸ்ட் 29 அன்று தீவிலிருந்து புறப்பட உள்ளது.


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4