நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் மாத்திரம் மழைக்கு வாய்ப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் மாத்திரம் மழைக்கு வாய்ப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில பகுதிகளில்50 மில்லி மீற்றர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

மேலும் ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காற்றானது  40-50 கி.மீற்றர் வரை வீசக்கூடும்.

 வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4