கனடாவுக்கு விசிட்டர் விசாவில் சென்றவர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி : அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!
கனடாவுக்கு விசிட்டர் விசாவில் சென்றவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அரசாங்கம் புதிய நடைமுறையை அமுல்படுத்தியுள்ளது.
விசிட்டர் விசாவில் சென்ற வெளிநாட்டவர்கள் வேலைக்கான விசாவுக்கு விண்ணப்பிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவுக்கு விசிட்டர் விசாவில் வருவோருக்கு அங்கிருந்து வேர் விசாவுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதற்கான காலஎல்லையை நேற்றுடன் நிறைவடைந்துள்ளதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
விசிட்டர் விசாவில் கனடாவில் தற்காலிகமாக தங்கியிருப்பவர்கள் பணி அனுமதிக்கு விண்ணப்பிக்கும் திட்டம் 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நிறைவடைவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் தற்காலிக குடியிருப்பு அனுமதி பெற்று கனடாவில் தங்கியிருப்போரின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, கனடா புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு அறிவித்துள்ளது. .
இந்நிலையில் Visitor visaவில் வந்தவர்கள் கனடாவில் இருந்து வேலை விசாவுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை உடன் அமலுக்கு வரும் வகையில முடிவுக்கு வந்துள்ளது.
எனினும் இந்த நடைமுறையின் கீழ் ஒகஸ்ட் மாதம் 28ஆம் திகதி முன் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை கனடாவினால் செயலாக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை விசிட்டர் விசா மூலம் இலங்கையை சேர்ந்த தமிழர்கள் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் கனடா சென்றுள்ளனர்.
அவர்களில் ஒரு தரப்பினர் புகலிடக் கோரிக்கைக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், மேலும் வேர்க் விசா பெற்றுக்கொள்ள முயற்சித்து வருகின்றனர்.
அண்மையில் கனடா சென்றவர்கள் வேர் விசாவுக்கு விண்ணப்பிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக சுமார் 25000 டொலர்கள் வரை செலவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.