இம்முறை புலமைப்பரிசில் பரீட்சை நேர அட்டவணையில் வரவுள்ள மாற்றம்!
இந்த வருடம் நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
பரீட்சையின் இரண்டாம் பாகம் காலை 9.30 மணி முதல் 10.45 மணிவரையிலும், முதலாம் பாகம் காலை 11.15 மணி முதல் 12.15 மணிவரையிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் வருகைப் பதிவேடு சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை பெயர்ப்பட்டியல் கிடைப்பெறாத பாடசாலைகளின் அதிபர்கள் www.doenets.lk அல்லது https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளங்களுக்குச் சென்று உரிய ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,649 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 15ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.