நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்பக்கூடிய கொள்கைகள் எந்த ஒரு ஜனாதிபதி வேட்பாளரிடமும் இல்லை!
நாடு எதிர்நோக்கி வரும் பொருளாதார பிரச்சினைக்கு எந்த ஒரு ஜனாதிபதி வேட்பாளரிடமும் தீர்வு இல்லை என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் விஞ்ஞான மற்றும் புள்ளிவிபரவியல் கற்கை பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்பக்கூடிய வகையிலான கொள்கைகளை எந்த ஒரு ஜனாதிபதி வேட்பாளரும் சமர்ப்பிக்கவில்லை.
கொள்கை பிரகடனங்களில் பொருளாதார சமூக மற்றும் அரசியல் கட்டமைப்பு தொடர்பிலான பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 5 ஆண்டு காலத்தில் நாட்டில் நிலவக்கூடிய பொருளாதார நெருக்கடி நிலைமைகளை வெற்றி கொள்வதற்கான வழிமுறைகளை எந்த ஒரு வேட்பாளரும் முன் வைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு ஓர் தீர்வு திட்டத்தை முன் வைக்காமை கவலை அளிப்பதாக பேராசிரியர் ஆத்துகோரள குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் வகையில் அரசியல் கட்சிகளினால் முன்மொழியப்பட்டுள்ள யோசனைகள் எந்த வகையிலும் ஏற்புடையதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகத்தை 10 வீதமாக அதிகரிக்க வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.