பிரான்சில் நடந்த துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் மரணம்
#Death
#France
#Women
#GunShoot
Prasu
6 months ago

Limeil-Brévannes (Val-de-Marne) நகரில் துப்பாக்கிச்சூடு ஒன்று இடம்பெற்றுள்ளது. rue des Herbages de Sèze வீதியில் உள்ள வீடொன்றில் மாலை 6.30 மணி அளவில் இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாகவும், வயது குறிப்பிடப்படாத பெண் ஒருவர் தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டதாகவும், அவருடன் இருந்த மற்றொரு ஆண் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அவர் உயிருக்காபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டிடத்தின் ஐந்தாவது தளத்தில் இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாகவும், துப்பாக்கிச்சூடு மேற்கொண்டவர் தப்பி ஓடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Val-de-Marne நகர நீதித்துறை காவல்துறையினர் (SDPJ) விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.



