ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 3,828 முறைப்பாடுகள் பதிவு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 3,828 முறைப்பாடுகள் பதிவு!

2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 3,828 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  

28 முறைப்பாடுகள் வன்முறைச் செயல்கள் தொடர்பிலும், மேலும் 3,720 முறைப்பாடுகள் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பிலும் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.  

இதேவேளை, இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் ஆர்.எம். ஏ. எல் ரத்நாயக்க தெரிவித்தார். 

அத்துடன், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பொலிஸாருக்கு 350 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4