தமிழ் மக்கள் சிவாஜிலிங்கத்திற்கு செய்த வரலாற்றுத் தவறினை அரியநேந்திரனிற்கு செய்யக் கூடாது! புலம்பெயர் தமிழர்

#SriLanka #Election #Tamil People
Mayoorikka
2 months ago
தமிழ் மக்கள் சிவாஜிலிங்கத்திற்கு செய்த வரலாற்றுத் தவறினை அரியநேந்திரனிற்கு செய்யக் கூடாது! புலம்பெயர் தமிழர்

தமிழ் மக்கள் ஒற்றுமையாக இணைந்து தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என சுவிஸ் வாழ் புலம்பெயர் தமிழரும் தமிழ் பற்றாளரும் சமூக ஆர்வலருமாகிய திரு. ரவி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். 

 எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் தமிழ் மக்களிற்கு அவசியம் தானா என்பது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

 இதுவரை காலமும் தமிழ் மக்கள் சிங்கள வேட்பாளர்களிற்கு வாக்களித்ததன் மூலம் இதுவரை எந்தவொரு நன்மையையோ தமிழ் மக்களிற்கான தீர்வோ இதுவரை கிடைக்கவில்லை. எனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிங்கள பொது வேட்பாளரை ஆதரிப்பதன் மூலம் தமிழருக்கு எந்தவிதமான நன்மையும் கிட்டப் போவதில்லை என்பது தீர்க்கமானான முடிவாகும்.

 ஆனால் தற்பொழுது தமிழ் பொது வேட்பாளராக அரியநேந்திரன் களமிறக்கப்பட்டுள்ளார். அந்த விடையத்தில் தமிழ் மக்கள் கடந்த காலங்களை போன்று அல்லாமல் தமிழ் பொது வேட்பாளருக்கே ஆதரவு வழங்க வேண்டும். கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிவாஜிலிங்கம் போட்டியிட்ட போது ஆதரிக்காமல் தமிழ் மக்கள் ஒரு வரலாற்று தவறினை இளைத்திருந்தார்கள். 

அதன் மூலம் புலம்பெயர் மக்களுக்கு ஈழத் தமிழ் மக்கள் சிங்கள அரசுக்கு கீழேயே வாழ விரும்புகின்றார் என காட்டி இருக்கின்றார்கள் என கூறப்பட்டது. 

சிவாஜிலிங்கத்தை தோற்கடித்து சிங்கள வேட்பாளரை வெற்றியடைய செய்ததன் மூலம் மறைமுகமாக சிங்கள அரசை ஆதரித்தார்கள் என புலம்பெயர் தமிழர்களினால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

 இதன் மூலம் தமிழர்கள் ஒற்றுமை இல்லாமல் இருப்பதை வெளிக்காட்டியிருந்தார்கள். சிங்கள பேரினவாதம் தங்களின் சுய லாபத்திற்காக தமிழர்களை பிரித்தாளும் அரசியலையே தொடர்ந்தும் செய்து வருகின்றார்கள்.

 எனவே இந்த தேர்தலில் அதனை முறியடித்து தமிழர்கள் ஒற்றுமையோடு தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரனிற்கு வாக்களித்து சிங்கள பேரினவாதத்திற்கும் சர்வதேசத்திற்கும் தமது பெரும்பான்மையை காட்ட வேண்டும். 

 இதன் மூலம் சர்வதேசத்திற்கு தமிழர்கள் சுய உரிமையுடன் வாழ விரும்புகின்றோம் என வெளிப்படுத்த வேண்டும். எனவே ஈழத்தில் சங்கை முழங்க செய்வதன் மூலம் உலகத் தமிழர்களும் ஒன்றிணைந்து சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களுக்கும் சர்வதேசத்திற்கும் தமிழ் மக்கள் தொடர்பில் அழுத்தங்களை பிரயோகிக்க முடியும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை காணொளியில் பார்க்க கீழுள்ள எமது யூரியூப் லிங்கினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!