திட்டமிட்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நாமல்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
திட்டமிட்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நாமல்!

திட்டமிட்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மஹியங்கனையில் இன்று (15.09) பிற்பகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், "உங்களுக்காக நிற்கும் உங்கள் தலைவருடன் தாய்நாட்டின் வெற்றியை உறுதிப்படுத்த இந்த ஆதரவுக்கு நன்றி. எங்களிடம் தொலைநோக்கு மற்றும் திட்டமும் உள்ளது. 

நாங்கள் வெறும் அதிகாரத்திற்காகவோ தேர்தலில் போட்டியிடவோ இல்லை. தேர்தலில் போட்டியிடுகிறோம் வெற்றி பெறுவோம். வெற்றி பெறுவோம். எங்களிடம் சரியான திட்டம் மற்றும் ஏற்பாடு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4