வவுனியாவில் தேர்தல் பாதுகாப்பிற்காக 1500 பொலிசார் கடமையில்! ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி!

#SriLanka
Mayoorikka
2 months ago
வவுனியாவில் தேர்தல் பாதுகாப்பிற்காக 1500 பொலிசார் கடமையில்!  ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி!

வவுனியாவில் ஜனாதிபதித்தேர்தல் கடமைகளுக்காக 1500பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தலுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் பி.எ.சரத்சந்திர தெரிவித்தார்.

 ஜனாதிபதித்தேர்தல் ஏற்ப்பாடுகள் தொடர்பான இறுதிக்கலந்துரையாடல் வவுனியா மாவட்டசெயலகத்தில் இன்று இடம்பெற்றது. அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறுதெரிவித்தார். தொடர்ந்துகருத்து தெரிவித்த அவர்……

 தேர்தலுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் தேர்தல் தினத்தில் நடந்துகொள்ளவேண்டிய முறைமைகள் தொடர்பாக வேட்பாளர்களின் முகவர்கள்,பொலிசார்,தேர்தல் கண்காணிப்பாளர்கள்,ஊடகவியலாளர்கள் உட்பட ஏனையதரப்புக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

 இதேவேளை வவுனியாமாவட்டத்தில் 152 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் 12 வாக்கெண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கெண்ணும் மத்தியநிலையமாக வவுனியா சைவப்பிரகாசா மகளீர்கல்லூரி செயற்ப்படவுள்ளதுடன், அதற்கான உரிய ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

 இதைவேளை தேர்தல்கடமைகளுக்காக 1500ற்கும் மேற்ப்பட்ட பொலிசார் வவுனியாமாவட்டத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல்கடமைகளில் ஈடுபடுபவர்களுக்கான போக்குவரத்து ஏற்ப்பாடுகள் அனைத்தும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!