கனடாவுக்கு பயணித்த இலங்கைத் தமிழர் ஒருவர் நாடுகடத்தப்பட்டுள்ளார்!
ஜெர்மன் பிராங்போர்ட் விமான நிலையம் ஊடாக கனடாவுக்கு பயணித்த இலங்கைத் தமிழர் ஒருவர் நாடு கடத்தப்பட்டுள்ளார். கனடாவில் வேர்க் விசா கிடைத்த நிலையில் இளைஞன் ஒருவர் பயணித்துள்ளார்.
எனினும் ஜேர்மன் விமான நிலையத்தில் அவரின் ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் அவர் இலங்கைக்கு மீண்டும் நாடு கடத்தப்பட்டுள்ளார். சட்ட ரீதியான ஆவணங்கள் மூலம் வேர்க் விசாவுக்கு விண்ணப்பித்து முறையாக பெற்றுக்கொள்ளப்பட்டது.
போலி ஆவணங்கள் எதுவும் இன்றி சட்டரீதியாக சென்ற வேளையில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் தான் எந்தவொரு பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடவில்லை என பாதிக்கப்பட்ட இளைஞன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ள நிலையில், தனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து கொழும்பு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைக்காலமாக ஐரோப்பா மற்றும் டுபாய் ஊடாக கனடாவுக்கு பயணிக்கும் தமிழர்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.