புடலங்காய் உண்பதால் உடலுக்கு என்ன நன்மை?

#Health #Food
Mayoorikka
1 year ago
புடலங்காய் உண்பதால்  உடலுக்கு என்ன நன்மை?

உடலுக்கு வலுவை அதிகரிக்கும். அத்கனால் மனமும் வலுவடைகிறது. தேகம் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், தேக மெலிவு மாறி உடல் பருமனடையும். அஜீரண கோளாறு நீங்கும். 

பசியைத் தூண்டும். குடல் புண் மற்றும் வயிற்றுப்புண், தொண்டைப்புண் போன்ற புண்களை விரைவில் குணமாக்கும். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், மலச்சிக்கலைப் போக்கும். அத்தோடு மூலநோய்க் காரர்களுக்கு புடலங்காய் சிறந்த மருந்தாகும்.

 ஞாபக சக்தியை அதிகரிக்கும். சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கும். ஆண்மை கோளாறுகளை நிவர்த்தி செய்யும். ஆண்களுக்கு விந்துவை கெட்டி படுத்தும். அத்தோடு காம உணர்வு அதிகரிக்கும்.

 பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலைக் குணப்படுத்தும். கருப்பைக் கோளாறுகளைப் போக்கும். காய்ச்சல் உள்ளவர்கள் புடலங்காயைக் கொதிக்க வைத்த நீரை அரு ந் தினால் ஒரே இரவில் காய்ச்சல் தணிந்து, உடல்நலம் இயற்கையாக சீராகத் தொடங்கும். கண் பார்வையைத் தூண்டும். உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

 வைட்டமின் A, B, C, கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், மினரல்கள், இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம், அயோடின், பொட்டாசியம், மாங்கனீசு போன்றவைகள் நிறைந்த காய்தான் இந்த புடலங்காய். நீர்க்காய்களில் மிக முக்கியமானது.

images/content-image/2024/09/1726808185.jpg 

நாட்டு காய்களில் தவிர்க்கவே முடியாதது. புடலங்காய் இளசாக இருந்தாலும் சரி, முற்றலாக இருந்தாலும், ஒரேமாதிரியான சத்துக்களை தரக்கூடியது. நீர்ச்சத்து காய் என்பதால், உடலை நீரேற்றமாக வைத்திருக்க செய்யும். இதனால், மலச்சிக்கல் பிரச்சனையை எளிதாக தீர்க்க முடியும். இதன் மூலம் குடல் ஆரோக்கியம் காக்கப்படுகிறது. 

மலச்சிக்கல் இருந்தாலும் கூட, புடலங்காய் சாறு 2 ஸ்பூன் குடித்தாலே நிவாரணம் கிடைக்கும். இதனால் குடல் புண்களும் ஆறிவிடும். குடல் தொடர்பான பிரச்சனைகளுக்கு புடலங்காய்களை போலவே, புடலங்காயின் இலைகளும் மருந்தாகின்றன. நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த காய் என்பதால், உடல் எடை குறைப்பதில் புடலங்காய்களின் பங்கு ஏராளம். இதன்மூலம் கொழுப்பையும் எளிதாக கரைக்க முடியும்.

 நரம்புகள்: 

 நரம்புகளின் சிறப்பான செயல்பாடுகளுக்கு இந்த புடலங்காய் மிகவும் நல்லது. வைட்டமின் B6 இந்த காயில் உள்ளதால், மூளையின் செயல்பாடுகளை சீராக்கி, நரம்புதூண்டுதல்களையும் மேம்படுத்துகிறது. இதனால் மன அழுத்தம், மன பதட்டம் தணிகிறது. நன்றாக தூக்கமும் வரும். ஒருவேளை இரவில் சரியாக தூக்கம் வராவிட்டால் புடலங்காய் சாறு குடித்து வந்தாலே போதும் நரம்பு செயல்பாட்டை சீராக்கி நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும்.

images/content-image/2024/09/1726808205.jpg

 மஞ்சள் காமாலை : 

கல்லீரலின் காவலன் என்று கீழாநெல்லி இலைகளை சொல்வோம். அதுபோலவே, கல்லீரலுக்கு இந்த புடலங்காய்களும் உதவுகின்றன. மஞ்சள் காமாலையின்போது, புடலங்காய் இலைகளையும், புடலங்காய்களையும் மருந்தாக தருவார்கள்.

 அதாவது, மல்லி விதைகளுடன், இந்த புடலங்காய் இலையையும் சேர்த்து வைத்து நசுக்கி, அதன் சாறை மட்டும் மருந்தாக தருவார்கள்.

 ஆண்கள் : 

இந்த புடலங்காய்களை ஆண்கள் அதிகம் தங்கள் உணவில் சேர்த்து கொள்ள வேண்டுமாம். இதனால், விந்தணுக்கள் பெருக்கம் ஏற்பட்டு மலட்டுத்தன்மை நீங்கும் என்பார்கள். குளிர்ச்சி நிறைந்த இந்த புடலங்காய், மூல நோய்களுக்கும் நிவாரணம் தருகிறது.

images/content-image/2024/09/1726808260.jpg

 இந்த புடலங்காயை பச்சை பயிறு கூட்டு போல வைத்து, 12 நாட்கள் என இடைவெளி விட்டு ஒரு மண்டலம் வரை சாப்பிட்டு வந்தாலே மூலம் நீங்கிவிடுமாம். எனினும், இப்படி மருந்தாக உட்கொள்ளும்போது, டாக்டர்களின் முறையான ஆலோசனையை பெற்று சாப்பிட்டால் கூடுதல் ஆரோக்கியம் கிடைக்கும்.

 குழந்தைகள் : 

சருமத்துக்கு மிகச்சிறந்த பொலிவையும், ஆரோக்கியத்தையும் இந்த புடலங்காய்கள் தரக்கூடியவை. புடலங்காயை குழந்தைகளுக்கு தந்து வந்தால், அவர்களுடைய ஞாபக சக்தி அதிகரிக்கும். உடலில் உள்ள உஷ்ணமும் குறையும் அதேபோல், ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு புடலங்காயை அதிகமாக தர வேண்டுமாம். அவர்களுடைய ஹைப்பர் ஆக்டிவிட்டியை இது குறைக்கிறதாம்.

 ஆம் மலிவான இப்புடலங்காயால் இவ்வளவு நன்மையா? இன்றே சாப்பிடுவோம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4