புதிய விசா கட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் வெளிநாட்டு மாணவர்கள்

#Student #Canada #Restrictions #Visa
Prasu
2 months ago
புதிய விசா கட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் வெளிநாட்டு மாணவர்கள்

கனடாவில் இந்திய மாணவர்கள் உள்பட வெளிநாட்டு மாணவர்கள் ஏராளமானோர் உயர்கல்வி படித்து வருகிறார்கள். 

அதேபோல் வெளிநாட்டை சேர்ந்த பலர் பணியாற்றி வருகிறார்கள். இதற்கிடையே வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார்.

உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா எண்ணிக்கை கணிசமான அளவு குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

கனடாவில் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் ஒரு பகுதியாக வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கும் படிப்பு அனுமதிகளின் எண்ணிக்கையை மேலும் குறைப்பதாக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து பிரதமர் ட்ரூடோ கூறும்போது, இந்த ஆண்டு சர்வதேச மாணவர்களுக்கு 35 சதவீதத்துக்கு குறைவான அனுமதி வழங்குகிறோம். அடுத்த ஆண்டு அந்த எண்ணிக்கை மேலும் 10 சதவீதம் குறையும்.

குடியேற்றம் நமது பொருளாதாரத்திற்கு ஒரு நன்மை. ஆனால் அதை தவறாக பயன்படுத்திக் கொள்ளும்போது, நாங்கள் ஒடுக்குகிறோம் என்றார். கனடாவில் 2023-ம் ஆண்டு 5.09 லட்சம் பேருக்கும், 2024-ம் ஆண்டின் முதல் 7 மாதங்களில் 1.75 பேருக்கும் அனுமதி வழங்கப்பட்டது. 

தற்போதைய கட்டுபாட்டால் 2025-ம் ஆண்டு வழங்கப்பட்ட வெளிநாட்டினருக்கு எண்ணிக்கையை 4.37 லட்சமாக குறைக்கும். கனடாவில் உள்ள வெளிநாட்டு மாணவர்களில் சுமார் 40 சதவீதம் பேர் இந்தியாவைச் சேர்ந்த வர்கள். 

சர்வதேச மாணவர் அனுமதிகளைக் குறைக்கும் கனடா அரசாங்கத்தின் நடவடிக்கையால் இந்திய மாணவர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியா போன்ற நாடுகளை தேர்ந்தெடுக்கும் சூழல் உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!