வாக்களிப்பு நேரம் குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட விசேட வர்த்தமானி

#SriLanka #Election #people #Vote
Prasu
1 year ago
வாக்களிப்பு நேரம் குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட விசேட வர்த்தமானி

இலங்கையில் இன்று ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில் மக்கள் ஆர்வமுடன் வந்து தமது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வாக்களிப்பு நேரத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி மாலை 4 மணியாகும்போது வாக்கெடுப்பு நிலையத்தில் வரிசைகளில் நிற்கின்ற அனைத்து வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்கப்படும் வரையில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என அதிவிசேட வர்த்தமானி திருத்தப்பட்டுள்ளது.

 1981ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் சட்டத்துக்கமைய மாலை 4 மணிவரை வாக்களிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4