நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

#SriLanka #sri lanka tamil news
Thamilini
1 year ago
நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (23) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 வடமேல் மாகாணத்தில் ஓரளவு மழை பெய்யக் கூடும் என திணைக்களம் குறிப்பிடுகிறது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

 ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

 மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை, மாத்தளை, மொனராகலை மாவட்டங்களிலும் காற்றானது 40-45 கி.மீற்றர்வரை பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4