புதிய ஜனாதிபதி அனுரவிற்கு உலக தலைவர்கள் வாழ்த்து!

#SriLanka #sri lanka tamil news
Thamilini
1 year ago
புதிய ஜனாதிபதி அனுரவிற்கு உலக தலைவர்கள் வாழ்த்து!

புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

நரேந்திர மோடி தனது X கணக்கில் இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த நெருக்கமாக பணியாற்றுவேன் என்று நம்புவதாகக் கூறியுள்ளார்.

 இதேவேளை, இந்நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்கவிற்கு அமெரிக்கா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங், தனது X கணக்கில் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான பங்காளித்துவத்தைப் பாராட்டுவதாகக் கூறினார். ஜூலி சாங் பொதுவான முன்னுரிமைகளில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தார். 

அத்துடன் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி புதிய ஜனாதிபதி திரு அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜப்பானிய தூதுவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரு நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்த தானும் ஜப்பானிய அரசாங்கமும் நம்புவதாகக் கூறுகிறார். 

 இதேவேளை, மாலைதீவு ஜனாதிபதி திரு. மொஹமட் முய்சுவும் திரு.அநுரகுமார திஸாநாயக்கவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நெருங்கிய அண்டை நாடான மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்று நட்புறவை வலுப்படுத்த இணைந்து செயற்படத் தயார் என தெரிவித்துள்ளார். 

 மேலும், பாகிஸ்தான் பிரதமர்  ஷெபாஸ் ஷெரீப்பும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தல் வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாகிஸ்தான் பிரதமர் தனது எக்ஸ் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4