09 நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவான அனுர குமார திஸாநாயக்க - விசேட வர்த்தமானி வெளியீடு!

#SriLanka #sri lanka tamil news
Dhushanthini K
2 hours ago
09 நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவான அனுர குமார திஸாநாயக்க - விசேட வர்த்தமானி வெளியீடு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சட்டத்தின் 61வது பிரிவின் கீழ் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

 விசேட வர்த்தமானி மூலம் தேர்தல்கள் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது. இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்பு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. 

 தேர்தலில் பதிவான வாக்குகளில் பாதிக்கு மேல் எந்த வேட்பாளரும் பெற முடியாத காரணத்தால், முதல் மற்றும் இரண்டாம் இடங்களில் உள்ள வேட்பாளர்களுக்கான இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பத்தேர்வுகள் எண்ணப்பட்டன. 

 105,264 வாக்குகளைப் பெற்ற அனுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றதுடன்  சஜித் பிரேமதாச 167,867 வாக்குகளைப் பெற்றார். இதன்படி அனுரகுமார திஸாநாயக்கவின் வாக்குகள் 5,740,179 ஆகவும்,  சஜித் பிரேமதாசவின் வாக்குகள் 4,363,035 ஆகவும் அதிகரித்துள்ளது. 

 தேர்தல் முடிவுகளின்படி, இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.