புற்றுநோய் சிகிச்சைக்கு பின் பொதுவெளியில் தோன்றிய பிரித்தானிய இளவரசி

#UnitedKingdom #Treatment #cancer #Princess
Prasu
1 year ago
புற்றுநோய் சிகிச்சைக்கு பின் பொதுவெளியில் தோன்றிய பிரித்தானிய இளவரசி

கடந்த மார்ச் மாதம் பிரித்தானிய இளவரசி கேத் மிடில்டன் சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு, தனக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதை உறுதி செய்தார்.

வயிற்றுப்பகுதியில் செய்யப்பட்ட சிகிச்சைக்கு பிறகான சோதனையின்போது புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும், குடும்பத்தின் நலன் கருதி அதனை வெளிப்படையாக சொல்லவில்லை என்றும் கூறியிருந்தார். 

புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவதால் கேத் மிடில்டன் இந்த ஆண்டு முழுவதும் பொதுவெளியில் தலைகாட்ட மாட்டார் என்றும் தகவல் வெளியானது. 

பூரணமாக குணமடைந்து மருத்துவக் குழு அனுமதித்தால் அவர் அரச கடமைகளுக்கு திரும்புவார் என அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனையடுத்து, புற்றுநோய்க்கான 6 மாத கால ஹீமோதெரபி சிகிச்சையை நிறைவு செய்துவிட்டதாக கடந்த 9ம் திகதி இளவரசி கேத் மிடில்டன் கூறியிருந்தார்.

அண்மையில் தனது அரச கடமைகளை மீண்டும் தொடங்கினார். இவ்வாறான நிலையில், இளவரசி கேத் மிடில்டன் புற்றுநோய் சிகிச்சைக்கு பிறகு முதல் முறையாக இன்று பொதுவெளியில் தோன்றியிருக்கிறார். 

பிரித்தானிய இளவரசி கேத் மிடில்டன் தன் கணவர் இளவரசர் வில்லியம், மன்னர் சார்லஸ், ராணி கமிலா ஆகியோருடன், ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் எஸ்டேட்டுக்கு அருகில் தேவாலய சேவையில் கலந்து கொண்டுள்ளார்.

 இதுதொடர்பான புகைப்படங்களை செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், இளவரசர் கார் ஓட்ட, பின் இருக்கையில் இளவரசி கேத் மிடில்டன் அமர்ந்திருந்ததை காண முடிந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4