மேல் மாகாண ஆளுநரின் விசேட அறிவிப்பு!

#sri lanka tamil news
Thamilini
1 year ago
மேல் மாகாண ஆளுநரின் விசேட அறிவிப்பு!

மேல் மாகாண ஆளுநர், விமானப்படையின் மார்ஷல்  ரொஷான் குணதிலக்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். 

 ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவர் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார். 

 மேல் மாகாணம் மற்றும் மேல்மாகாண அரச சேவையின் முன்னேற்றத்திற்காகவும் மேல் மாகாண மக்களின் நலனுக்காகவும் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக தாம் மிகுந்த பலத்துடன் செயற்பட்டதாக அவர் குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பல வருடங்களாக கொவிட் தொற்றுக்கு முகம் கொடுத்து மக்களின் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் வகையில் மேல் மாகாணத்தின் பொதுச் சேவையை முன்னெடுத்துச் செல்லக் கூடிய பாக்கியம் தனக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4