இலங்கை மக்கள் தினமும் 6.5 பில்லியன் ரூபா கடனாளிகளாக மாறியுள்ளனர் - வசந்த அத்துகோரள
கடந்த 26 மாதங்களில் உள்ளுரில் ஆட்சியாளர்கள் பெற்ற கடன் தொகையை வைத்துப் பார்த்தால் இந்நாட்டு மக்கள் தினமும் 6.5 பில்லியன் ரூபா கடனாளிகளாக மாறியுள்ளதாக பொருளாதார புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
நாடு கடுமையான கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக புதிய பொருளாதார சீர்திருத்த தொடர் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
“ஒவ்வொரு மாதமும் இந்நாட்டு மக்கள் 196 பில்லியன் ரூபா கடனாளிகளாக்கப்படுகின்றனர். ஒவ்வொரு நாளும் நாம் 6.5 பில்லியன் ரூபா கடனில் உள்ளோம். இவ்வகையான கடன் தொடர்பான கடுமையான நெருக்கடியில் இலங்கை உள்ளது.
அதே நேரத்தில் 2021 உடன் ஒப்பிடும்போது நாட்டின் பணவீக்கம், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் 106% அதிகரித்துள்ளது மற்றும் நமது உணவு மற்றும் சேவைகளின் விலைகள் 138% அதிகரித்துள்ளது மிகக் குறுகிய கால அவகாசம் மூலம், மக்கள் தேவையான பின்னணியை உருவாக்க முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.