குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் இலுக்பிட்டியவிற்கு விளக்கமறியல்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் இலுக்பிட்டியவிற்கு விளக்கமறியல்!

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குடிவரவு கட்டுப்பாட்டாளர் எச். இலுக்பிட்டியவை விளக்கமறியலில் வைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 இ-விசா வழங்கும் நடவடிக்கையை இரண்டு தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் முடிவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை நடைமுறைப்படுத்த தவறியதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 

 குறித்த வழக்கு இன்று (25) அழைக்கப்பட்ட போது குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டதை அடுத்து குடிவரவு குடியகழ்வு அதிகாரியை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு ஜனவரி 22ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4