செஸ் ஒலிம்பியாட் - இந்திய அணிக்கு 3.2 கோடி வெகுமதி அறிவிப்பு

#India #money #Chess
Prasu
1 year ago
செஸ் ஒலிம்பியாட் - இந்திய அணிக்கு 3.2 கோடி வெகுமதி அறிவிப்பு

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது. 

போட்டி முடிவில் ஆண்கள் அணி 19 புள்ளிகளையும், பெண்கள் அணி 17 புள்ளிகளையும் பெற்று அசத்தியது. செஸ் ஒலிம்பியாட்டில் முதல் முறையாக தங்கம் வென்ற இந்திய அணிக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்து வந்தனர். 

இந்த சூழலில் செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய அணியினர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்நிலையில் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு (ஏ.ஐ.சி.எப்.) சார்பில் இன்று நடைபெற்ற பாராட்டு விழாவின் போது, வரலாற்று சிறப்புமிக்க 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வென்ற இந்திய அணிக்கு பரிசுத் தொகையாக ரூ.3.2 கோடியை வெகுமதியாக அறிவிக்கப்பட்டது. 

இதுதொடர்பாக ஏ.ஐ.சி.எப். தலைவர் நிதின் நரங் கூறுகையில், "ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.25 லட்சமும், ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளின் பயிற்சியாளர்களான அபிஜீத் குண்டே மற்றும் ஸ்ரீநாத் நாராயணன் ஆகியோருக்கு தலா ரூ.15 லட்சமும், துணை பயிற்சியாளருக்கு ரூ.7.5 லட்சமும் பரிசாக வழங்கப்படும். 

எங்கள் வீரர்கள் சதுரங்கப் பலகையில் ஷார்ப் ஷூட்டர்கள். விஸ்வநாதன் ஆனந்த் விதைத்த விதைகள் காடாக வளர்ந்துள்ளன" என்று அவர் பெருமிதம் தெரிவித்தார். .

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4