வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

#SriLanka #weather
Thamilini
1 year ago
வடக்கு, கிழக்கு  உள்ளிட்ட பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

நாளை (27) முதல் அடுத்த சில நாட்களுக்கு தீவின் பல பகுதிகளில் மாலை இடியுடன் கூடிய மழைக்கு சாதகமான வளிமண்டல நிலை எதிர்பார்க்கப்படுகிறது. 

 மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

 கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

 மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் மாத்தளை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் காற்று 40-45 கி.மீ. வரை வீசும். 

 இடியுடன் கூடிய மழை  தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4