மார்பக புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
மார்பக புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் மார்பக புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது. 

 சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட  சமூக சுகாதார வைத்திய நிபுணர்  ஹசரெலி பெர்னாண்டோ மேற்படி குறிப்பிட்டுள்ளார். 

மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் அதனால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என தெரிவித்தார். 

இலங்கையில் வருடாந்தம் 5,000க்கும் அதிகமான மார்பக புற்றுநோய்கள் பதிவாகுவதாகவும்  உலக நாடுகளில் மார்பகப் புற்றுநோய் எண்ணிக்கை  அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஆனால் இலங்கையின் சிறப்பு என்னவெனில், இலங்கையுடன் ஒப்பிடும்போது உலகில் முன்கூட்டியே கண்டறிதல் அதிகமாக உள்ளது. எனவே, மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது மார்பக புற்றுநோயால் ஏற்படும் இறப்புகளின் சதவீதம்  அதிகம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4