மகாவலி கங்கையில் நீராடச் சென்ற இருவர் மாயம்!

#SriLanka #sri lanka tamil news
Thamilini
1 year ago
மகாவலி கங்கையில் நீராடச் சென்ற இருவர் மாயம்!

வத்தேகம சிரிமல்வத்த பிரதேசத்தில் இருந்து மகாவலி கங்கையில் நீராடச் சென்ற 5 இளைஞர்களில் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இவர்களில் மூன்று இளைஞர்கள் நேற்று (25.04) பிற்பகல் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 

ஒருவர் உயிர் பிழைத்துள்ளதுடன் சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 வத்தேகம பிரதேசத்தில் வசிக்கும் 19 வயது மற்றும் 22 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். காணாமல் போன இரு இளைஞர்களை தேடும் பணியை பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். 

 இவர்களில் ஒருவரின் தாயார் வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பியதாகவும், அவர் கொண்டு வந்த வெளிநாட்டு மதுபான போத்தலை குடித்துவிட்டு ஆற்றில் விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4