கனடாவின் லிபரல் அரசாங்கத்திற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

#Prime Minister #Parliament #Canada #government
Prasu
15 hours ago
கனடாவின் லிபரல் அரசாங்கத்திற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

கனடாவின் லிபரல் அரசாங்கத்திற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்துள்ளது.

சிறுபான்மை அரசாங்கமான லிபரல் அரசாங்கத்திற்கு எதிராக பியே பொலியேவின் தலைமையிலான கான்சர்வேட்டிவ் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றில் சமர்ப்பித்தது. எனினும் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

நிபந்தனை அடிப்படையில் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாக பிளாக் கியூபிகோ கட்சி அறிவித்துள்ளது. தங்களது நிபந்தனைகள் எதிர்வரும் மாதத்திற்குள் நிறைவேற்ற தவறினால் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கப்படும் என பிளாக் கியூபிகோ கட்சியை தெரிவித்துள்ளது.

வயோதிபர் பராமரிப்பு உள்ளிட்ட சட்டமூலங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு என்.டி.பி கட்சியும் லிபரல் கட்சியும் பிளக் கியூபிகோ கட்சியும் எதிராக வாக்களித்தனர். 

 பிளாக் கியூபிகோ காட்சிக்கு கட்சியின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதால் இல்லையா என்பது குறித்து லிபரல் அரசாங்கம் இதுவரையில் பதில் எதனையும் வழங்கவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!