நாட்டின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

#SriLanka #sri lanka tamil news
Thamilini
1 year ago
நாட்டின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (28) மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 மேலும் மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் குருநாகல், களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மி.மீ. 100 வரை பலத்த மழை பெய்யக்கூடும். 

 தென் மாகாணம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் காலை வேளையில் மழை பெய்யக் கூடும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. 

 எனவே, இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4