தாஹியே பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இலங்கையருக்கு பாதிப்பில்லை என அறிவிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
தாஹியே பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இலங்கையருக்கு பாதிப்பில்லை என அறிவிப்பு!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தாஹியே பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இலங்கையர் எவரும் காயமடையவில்லை என லெபனானுக்கான இலங்கைத் தூதுவர் திரு கபில ஜயவீர தெரிவித்துள்ளார்.

 இஸ்ரேலின் தஹியே நகரில் உள்ள ஹிஸ்புல்லாஹ் தலைமையகம் இன்று (27) இரவு தாக்குதலுக்கு உள்ளானது. 

 அதோடு, நகரில் ஒரே இடத்தில் சுமார் 10 குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

 அத்துடன், தாக்குதலின் பின்னர் தம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்ட 05 இலங்கையர்கள் பாதுகாப்புக்காக உடனடியாக இலங்கை தூதரகத்திற்கு அழைக்கப்பட்டதாகவும் தூதுவர் குறிப்பிட்டார். 

 இது தொடர்பில் இலங்கை சமூகம் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் தூதுவர் கேட்டுக்கொள்கிறார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4