தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

#SriLanka #Election Commission
Thamilini
1 year ago
தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

 கொழும்பில் நேற்று (28.09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  “அஞ்சல் வாக்களிப்பு விண்ணப்பங்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும். 

1981 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் பிரகாரம் தபால் மூல வாக்குகளுக்கான விண்ணப்பங்களை ஏற்க எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட வேண்டும். 

 அதன்படி, அனைத்து தபால் வாக்காளர்களும் இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான உங்களின் தபால் வாக்கு விண்ணப்பங்களை நிறுவனத் தலைவரால் சான்றளித்து, உங்கள் வாக்கைப் பதிவு செய்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

 இந்த தேர்தல் 2024 வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டது. அதன்படி கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்படும்" என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4