வானில் ஏற்படும் மாற்றம் : பூமியை தற்காலிகமாக சுற்றிவரும் இரண்டாம் நிலவு!
#SriLanka
Dhushanthini K
1 month ago
பூமியில் வசிப்பவர்களுக்கு இன்று (29) முதல் புதிய விண்வெளி அனுபவத்தை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
சுமார் 10 மீட்டர் விட்டம் கொண்ட ஒரு சிறிய நிலவு பூமியின் ஈர்ப்பு விசையால் பிடிக்கப்பட்டு தற்காலிகமாக அதைச் சுற்றி வருவதே இதற்குக் காரணம்.
இதனால் பூமிக்கு அருகில் பயணித்துக்கொண்டிருந்த 2024 பிடி ஃபைவ் (PT 5) என்ற சிறுகோள் தற்காலிகமாக பூமியைச் சுற்றி வரத் தொடங்கும்.
பூமியின் நிலவை விட மிகவும் சிறியதாக இருக்கும் இந்த தற்காலிக நிலவு இன்று முதல் நவம்பர் 25ம் திகதிவரை 53 நாட்கள் பூமியை சுற்றி வர உள்ளது.
மனிதக் கண்ணுக்குப் புலப்படாத இரண்டாவது சந்திரனை தொழில்முறை தொலைநோக்கி மூலம் மட்டுமே பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.