வடக்கு கிழக்கு அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கும் அல்லிராஜா சுபாஸ்கரன் : தீவிர அரசியலில் ஈடுபடபோகிறாரா?

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 month ago
வடக்கு கிழக்கு அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கும் அல்லிராஜா சுபாஸ்கரன் : தீவிர அரசியலில் ஈடுபடபோகிறாரா?

இலங்கையில் அரசியல் களம் மிகவும் சூடு பிடித்துள்ளது. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்ற நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தலுக்கான ஆயத்த வேலைகள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில்   சிங்களவர்கள் மத்தியில் தோல்வி கண்டுள்ள அரசியல்வாதிகள் தமது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்ள போராடி வருகின்றனர்.

மறுபக்கத்தில் வடக்கு கிழக்கில் பிளவுபட்டுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன. வயதானவர்களை வீட்டுக்கு அனுப்பி புதியவர்களை களம் காண வைக்க வேண்டும் என்ற கோஷங்கள் எழுந்துள்ளன. சில சுயேட்சை குழுக்களும் தோற்றம் பெற்றுள்ளன. 

இவ்வாறான நிலையில் தமது இருப்பை தங்க வைக்க தமிழ் அரசியல்வாதிகள் ஓரணியின் கீழ் அணி திரள திட்டமிட்டுள்ளனர். அதற்கான பேச்சுவார்த்தைகள் பல இழுபறிகளுக்கு மத்தியில் இடம்பெற்று வருகின்றன.

 வடக்கு கிழக்கு புதிய கூட்டணி ஒன்றை ஏற்படுத்தும் முயற்சி தீவிரமாக இடம்பெற்று வருகிறது. இதன் பின்னணியில் லைக்கா மொபைல் உரிமையாளர் சுபாஸ்கரன் அல்லிராஜா உள்ளார்.

பிரித்தானியாவில் பல வர்த்தகங்களை முன்னெடுத்து வரும் அவர் இலங்கையில் பல முதலீடுகளை மேற்கொண்டுள்ளார்.  இலங்கையில் ஊடகங்கள் உட்பட பல நிறுவனங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அவர்அரசியலில் ஈடுபடும் முயற்சியில் செயற்பட்டு வருகிறார்.

கடந்த வருடம் முதல் இதற்கான ஏற்பாடுகள் மிகவும் சாதுர்யமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான பிரத்தியேக சின்னம் ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பின்புலமாக இருந்து கூட்டணி ஒன்றை உருவாக்கும் சுபாஸ்கரன், விரைவில் அரசியல் கட்சியாக உருவெடுக்க திட்டமிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கில் ஏற்கனவே தமிழ் கட்சிகள் பிளவுபட்டுள்ள நிலையில் புதிய கூட்டணியின் வருகை தமிழர்களின் அரசியல் இருப்பை எவ்வாறு பாதிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!