கடுமையான மின்னல் தாக்கம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

#SriLanka #sri lanka tamil news
Thamilini
1 year ago
கடுமையான மின்னல் தாக்கம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இன்று (29) பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் அபாயம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் இந்த அபாயம் நிலவுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 இதன் காரணமாக மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களை குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு அறிவித்துள்ளது. 

 இன்று பிற்பகல் அல்லது இரவு மத்திய, சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மாவட்டத்திலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4