இஸ்ரேலில் தொழிலுக்கு சென்ற இளைஞர் உயிரிழப்பு!

#SriLanka #sri lanka tamil news
Thamilini
1 year ago
இஸ்ரேலில் தொழிலுக்கு சென்ற இளைஞர் உயிரிழப்பு!

இஸ்ரேலில் வேலைக்காக சென்ற இலங்கை இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். 

 கண்டியில் வசிக்கும் 35 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் 6 மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேலுக்கு வந்து விவசாய துறையில் பணியாற்றி வருவதாக  நிமல் பண்டார தெரிவித்தார்.

 உயிரிழந்த இளைஞனின் சடலத்தை இலங்கைக்கு அனுப்பும் விடயம் தொடர்பில் தற்போது செயற்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4