கட்சிக்கு துரோகம் இழைத்தவர்களுக்கு பொதுத் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது : பொதுஜன பெரமுன!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
கட்சிக்கு துரோகம் இழைத்தவர்களுக்கு பொதுத் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது : பொதுஜன பெரமுன!

ஜனாதிபதி தேர்தலில் கட்சிக்கு துரோகம் இழைத்த எவருக்கும் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்புமனுக்களை வழங்காது என அக்கட்சி தெரிவித்துள்ளது. 

 அக் கட்சியின்  பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான  சாகர காரியவசம் கொழும்பில் இன்று (30.09) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  “எங்கள் கட்சிக்கு துரோகம் இழைத்த ஒரு பிரிவினர் உள்ளனர்.அந்த பிரிவினரின் அரசியல் நிலவரம் பற்றி நான் பேச விரும்பவில்லை. 

கட்சிக்கு துரோகம் செய்த யாருக்கும் மீண்டும் கட்சியில் உயர்பதவிகளோ, வேட்புமனுவோ வழங்கப்படமாட்டாது.ஏற்க மாட்டோம். 

கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் "கட்சி முடிவு செய்துள்ளது. இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பொஹொட்டுவ சின்னத்தில் போட்டியிடும்."எனத் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4