எரிபொருளுக்கான விலைகள் குறைப்பு!
மாதாந்த விலை சூத்திரத்தின் பிரகாரம், நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்ய இலங்கை பெற்றோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 21 ரூபாவினால் குறைந்துள்ளதுடன், அதன் புதிய விலை 311 ரூபாவாகும்.
95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என பெற்றோலிய சட்ட ரீதியான கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
லங்கா ஒயிட் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 24 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 283 ரூபாவாகும்.
லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 33 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 319 ரூபாவாகும்.
இலங்கை மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 19 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 183 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, லங்கா ஐஓசி நிறுவனமும் தனது எரிபொருள் விலைகள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, சிபெட்கோ எரிபொருள் விலைக்கு ஏற்றவாறு எரிபொருள் விலையை குறைக்கவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சினோபெக் எரிபொருள் விலையை திருத்தியுள்ளது.
சினோபெக் எரிபொருள் விலைக்கு ஏற்ப எரிபொருள் விலையை குறைக்கும் என்று Sipetco தெரிவிக்கிறது.