புதையல் தோண்ட முற்பட்டவர்களுக்கு நேர்ந்தக் கதி!

#SriLanka #Arrest #treasure
Thamilini
1 year ago
புதையல் தோண்ட முற்பட்டவர்களுக்கு நேர்ந்தக் கதி!

பரமன்கட பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் புதையல் தோண்டிய தந்தை மகன் தம்பதியரை பல லட்சம் ரூபா பெறுமதியான 11 மணிக்கற்கள், சிறிய புராதன புத்தர் சிலை, சிறிய தங்க நிற மஞ்சுசா, 3 விலைமதிப்பற்ற மற்றும் அரிய வகைகளுடன் கைது செய்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். 

பசறை பொலிஸாருக்கும் பசறை அகரதென்ன பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கும் இடையில் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

குறித்தசந்தேகநபர்கள் இருவரும் ஏற்கனவே பசறை பரமன்கட பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் புதையல் தோண்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 கேகாலை பிரதேசத்தில் வசிக்கும் 75 மற்றும் 26 வயதுடைய தந்தை மற்றும் மகன் ஆகியோரே இவ்வாறுகைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4