இராஜதந்திரிகளை மீள அழைக்க நடவடிக்கை

#SriLanka #Sri Lanka President
Mayoorikka
1 year ago
இராஜதந்திரிகளை மீள அழைக்க நடவடிக்கை

அரசியல் பலம் மற்றும் விசுவாசத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை மீள அழைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த கூட்டத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத், இது தொடர்பான அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இந்த அறிக்கையின் அடிப்படையில் அரசியல் நியமனம் பெற்றவர்களின் பதவிகள் மீள பெறப்படும் என அவர் கூறினார்.

 "எம்.பி.க்களின் பல மகன்கள் மற்றும் மகள்களுக்கு இராஜதந்திர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன," என்று அவர் கூறினார். எவ்வாறாயினும், இலங்கை இராஜதந்திரிகள் எவரும் உடனடியாக மீள அழைக்கப்பட மாட்டார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4