அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரையில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது - கருணாரத்ன!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரையில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது - கருணாரத்ன!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) திட்டமிட்டு எரிபொருளுக்கு தேவையான அனைத்து ஆர்டர்களையும் வழங்கியுள்ளதால் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை எரிபொருள் தட்டுப்பாடு இருக்காது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. கருணாரத்ன தெரிவித்தார். 

 ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், போதுமான எரிபொருள் இருப்புக்களை பராமரிப்பதற்கான எதிர்காலத் திட்டங்கள் வாரந்தோறும் திட்டமிடப்படும். "சிபிசி சுத்திகரிப்பு துறையை மிகவும் திறமையான எரிபொருள் விநியோகத்திற்காக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

தற்போதைய விலை சூத்திரத்தின்படி சமீபத்திய எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும்   பொதுமக்களுக்கு அதிக சலுகைகளை வழங்க CPC சூத்திரத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். 

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பான தீர்மானங்கள் வெளிப்படைத் தன்மையுடன் எடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக ஒழுங்குமுறை ஆணைக்குழுவிடம் கையளிப்பதாக நம்புவதாகவும் தலைவர் குறிப்பிட்டார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4