கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை குறைக்க நடவடிக்கை!
#SriLanka
#prices
Dhushanthini K
1 week ago
எரிபொருள் விலை குறைப்புக்கு இணையாக கொள்கலன் போக்குவரத்து கட்டணம் நேற்று (01) நள்ளிரவு முதல் 4 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக கொள்கலன் கார் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுளா தெரிவிக்கையில், “அரசாங்கம் எரிபொருள் விலையை குறைத்துள்ள நிலையில், ஆட்டோ டீசல் விலை ரூ.24 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
அந்த விலைகளுடன் ஒப்பிடுகையில், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை 4% குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது, அரசு முழுவதுமாக பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை குறைக்க எங்கள் செயற்குழு முடிவு செய்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.