ஜனாதிபதியை சந்தித்த இலங்கைக்கான ரஷ்ய தூதுவர்

#SriLanka #Russia #President #AnuraKumaraDissanayake #Ambassador
Prasu
1 year ago
ஜனாதிபதியை சந்தித்த இலங்கைக்கான ரஷ்ய தூதுவர்

இலங்கைக்கான ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவர் லெவன் எஸ்.டகார்யன் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்தார். 

இந்த சந்திப்பில் தூதுவர் எஸ். எஸ்.டகார்யன் புதிய ஜனாதிபதிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் தனிப்பட்ட செய்தியையும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு வழங்கினார்.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் வலுவடையும் என ஜனாதிபதி புடின் தனது செய்தியில் குறிப்பிட்டிருந்தார். 

இக்கலந்துரையாடலில், இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

 வர்த்தகம், முதலீடு, கலாச்சாரம் மற்றும் கல்வி போன்ற முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, இருதரப்பும் பரஸ்பரம் இராஜதந்திர உறவுகளை மேம்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தின.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4