அனுரவின் வேலைத்திட்டத்தை பாராட்டும் ஜப்பானிய தூதுவர்!

#SriLanka #AnuraKumara
Dhushanthini K
1 week ago
அனுரவின் வேலைத்திட்டத்தை பாராட்டும் ஜப்பானிய தூதுவர்!

ஊழலற்ற சரியான ஆட்சியை உருவாக்கும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர்  மிசுகோஷி ஹிடேகி தெரிவித்தார்.

 ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு இன்று (02.10) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. 

இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட  அனுரகுமார திஸாநாயக்கவிற்கு தனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்த ஜப்பானிய தூதுவர், ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு ஜப்பானிய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் தெரிவித்தார். 

 அத்துடன், இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஜப்பானிய மொழியை கற்று ஜப்பானில் தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்கு இலங்கையர்களுக்கு ஆதரவளிப்பதாக ஜப்பானிய தூதுவர் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!