சடுதியாக வீழ்ச்சியடைந்த டொலரின் பெறுமதி : மத்திய வங்கி வெளியிட்ட தகவல்!
#SriLanka
#Dollar
Dhushanthini K
9 months ago

இலங்கையில் ஏறக்குறைய 15 மாதங்களுக்கு பிறகு அமெரிக்க டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதன்படி இன்றைய (02.10) நாணய மாற்று விகிதத்தின்படி டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 300க்கும் கீழ் மட்டத்தை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தினசரி மாற்று விகித அட்டவணையின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 290 ரூபாய் 30 சதமாகவும், விற்பனை விலை 299 ரூபாய் 35 சதமாகவும் பதிவாகியுள்ளது.



