05 பாடசாலை மாணவர்களை துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!

#SriLanka #Arrest
Dhushanthini K
1 week ago
05 பாடசாலை மாணவர்களை துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!

15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரும் 05 பாடசாலை மாணவர்களும் பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் 63 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

 பேராதனை மேல் முருதலாவ பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரை கண்டி பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் கைது செய்துள்ளது. 

 சந்தேகநபர் பிரதேசவாசிகளை பயமுறுத்தி சிறுவர்களையும் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 குறித்த நபருக்கு எதிராக 15 வயது சிறுமியின் சார்பில் பேராதனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்காமல் பொலிஸார் சந்தேக நபரை விடுவித்துள்ளதாகவும் எமது செய்தியாளர் கூறுகின்றார். 

 துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் 05 பாடசாலை மாணவிகளும் 12 முதல் 15 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் உள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

 சந்தேகநபர் பாடசாலை மாணவியையும் ஐந்து மாணவர்களையும் பல சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது. திருமணமாகி இரண்டு பிள்ளைகளின் தந்தையான சந்தேக நபர் மற்றுமொரு ஆண் குழந்தையை அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். 

 கண்டி பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் நிலைய கட்டளைத் தளபதி பிரதம பொலிஸ் பரிசோதகர் தேவிந்தி விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில், சிவில் உடையில் வந்த பொலிஸ் குழுவினர் கிரிபட்கும்புர பிரதேசத்தில் வைத்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர். 

 துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சிறுமி மற்றும் ஐந்து மாணவிகளை கண்டி தேசிய வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் ஒப்படைத்து அறிக்கை பெறுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

 சட்ட வைத்தியரிடம் பரிந்துரைக்கப்பட்ட சந்தேகநபர் இன்று (02) கண்டி மேலதிக நீதவான் வாசனா நவரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!