ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் இலங்கையின் நாணயம் வளர்ச்சி கண்டுள்ளது!

#SriLanka #money
Mayoorikka
1 hour ago
ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் இலங்கையின் நாணயம் வளர்ச்சி கண்டுள்ளது!

அமெரிக்க, ரஷ்ய, அவுஸ்ரேலிய ,கியூபாஅரசுகள் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி அனுரவை இலங்கையில் சந்தித்து உரையாடியுள்ளதோடு தங்களின் பூரண ஆதரவையும் நாட்டின் வளர்ச்சிக்கு வர்த்தக ஒப்பந்தங்களையும் செய்வதாக உறுதியளித்துள்ளனர்.

 இவ் நடவடிக்கை காரணமாக இலங்கையின் நாணயம் வளர்ச்சி கண்டுள்ளது 1அமெரிக்க டாலர் =315/= ரூபாயாக இருந்தது தற்போது295 /= வாக வீழ்ச்சி கண்டுள்ளது. 1 சுவிஸ் பிராங் = 364= வாக இருந்தது தற்போது 347/= வீழ்ச்சி கண்டுள்ளது . 

 இலங்கை நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றப்பாதையில் செல்வதற்கான காரணம். முன்னாள் அரசியல்வாதிகளின் அனாமதேய செலவுகள் துடைக்கப்பட்டதால் இலங்கை ரூபா தன்னை ஸ்திரப்படுத்தி வருவதும் , உலகநாடுகளின் நல்லலெண்ண சமிக்ஞைகளுமே காரணமாகும்.

 அத்தோடு புலம்பெயர் ஈழத்தமிழர்களின் பொருளாதார பலத்தையும் இலங்கைக்கு திருப்பி பல தொழில் வளங்களை இலங்கை மண்ணில் உருவாக்கவும் , புலம்பெயர் சமூக சமய அமைப்புக்கள் இலங்கையில் சுயாதீனமாக செயற்பட்டு மக்கள் சேவைகளை செய்ய அமைப்புக்களை சட்டரீதியாக விரைந்து பதிவுசெய்து கொடுத்து ஒழுங்குமுறைப்படுத்த வேண்டியதும் ஜனாதிபதியின் கவனத்திற்குரியதாகும்.

 முடிந்தவரை அன்னியச் செலாவணியை இலங்கைக்கு கொண்டுவந்தால் மட்டுமே இலங்கையின் பொருளாதார வீக்கத்தைக் குறைக்கமுடியும்; வறுமைக்கோட்டின் கீழ் வாழும் அன்றாடங்காச்சிகளான பாட்டாளி மக்கள் வாழ்வு சிறக்கும் அவர்களுக்கான ஆதாரமான ஓர் நல்அரசு விரைந்து உருவாகும் .

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!