கட்டுநாயக்க விமான நிலையத்தில் சந்தேக நபர் ஒருவர் கைது!

#SriLanka #Arrest #Airport
Thamilini
1 year ago
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சந்தேக நபர் ஒருவர் கைது!

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

 பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலைய அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

 கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து ஒரு கிலோ 883 கிராம் குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் கொட்டுகுடா பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

 இதேவேளை, மிதிகம இப்பவல பிரதேசத்தில் ஒரு கிலோ 838 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

 மிதிகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை பரிசோதித்த போது இந்த போதைப்பொருள் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

 கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடையவர் எனவும், சுற்றிவளைப்பின் போது அங்கிருந்த மேலும் மூவர் தப்பிச் சென்றுள்ளனர். அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 இதேவேளை, வெலிப்பன்ன, கொஸ்கஹதெனிய பிரதேசத்தில் 920 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் வலகெதர பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4