லெபனானில் உள்ள இலங்கையர் தொடர்பில் வெளியான தகவல்

#SriLanka #Lebanon
Mayoorikka
1 year ago
லெபனானில் உள்ள இலங்கையர் தொடர்பில் வெளியான தகவல்

லெபனானில் சிக்கித் தவிக்கும் சில இலங்கையர்களைத் தவிர, பாரியளவில் இலங்கையர்கள் எவரும் இதுவரையில் பாதிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

 தூதரகத்தில் பதிவுசெய்யப்பட்ட தனிப்பட்ட இலங்கையர்களுடன் பெய்ரூட்டில் உள்ள இலங்கைத் தூதரகம், தொடர்ந்து தொடர்பைப் பேணி வருவதாக அமைச்சு கூறியுள்ளது.

 அத்துடன், பெய்ரூட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் தேவையான உதவிகளை வழங்கி வருவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தூதுவர் கபில ஜயவீர உள்ளிட்ட இலங்கை தூதரக அதிகாரிகள் இலங்கையர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருவதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 சிக்கித் தவிக்கும் சில இலங்கையர்கள் மற்றும் தூதரகத்தால் தங்கவைக்கப்பட்டவர்களைத் தவிர, இந்த சூழ்நிலையால் இதுவரை எந்த இலங்கையரும் கடுமையாக பாதிக்கப்படவில்லை.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4